கரூர் நகராட்சிக்குள்பட்ட சின்னஆண்டாங்கோவில் பகுதியைச் சேர்ந்த தம்பதி பழனிசாமி - துளசி. இவர்களது மகள் சுபிக்ஷா (6) அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்துவருகிறார்.
இன்று மதியம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, அப்பகுதியில் சுற்றித்திரிந்த நான்கு வெறிநாய்கள் தாக்கத்தொடங்கின. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் நாய்களை விரட்டி அடித்து, சிறுமியைப் பத்திரமாக மீட்டனர்.
இதையடுத்து காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு தற்போது தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.
வெறிநாய்களின் தொந்தரவு கரூர் நகராட்சிப் பகுதியில் பொதுமக்களுக்குப் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்திவருவதால் நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை 18% உயர்வு