ETV Bharat / state

இது கரோனா நடைபயணம்... - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு

கரூர்: கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து தங்களது குழந்தைகளைக் காண தம்பதியினர் சிதம்பரம் நோக்கி நடந்து சென்றுவருகின்றனர்.

COUPLES WALKED TO THEIR NATIVE DUE TO NATION WIDE CURFEW

author img

By

Published : Mar 27, 2020, 10:21 AM IST

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பேருந்து போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரியும் வடிவேல் என்பவர் பேருந்து போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால் தனது சொந்த ஊருக்கு அவர் நடந்தே சென்றார்.

அதேபோல், கோவை மாவட்டம் பல்லடத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தம்பதியினர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதையடுத்து, சிதம்பரத்திலுள்ள தங்களது குழந்தைகளைக் காண நடந்தே சென்றனர்.

இது கரோனா நடைபயணம்

இதுகுறித்து அவர்கள் பேசுகையில், போக்குவரத்திற்கு வாகனங்களின்றி சிரமப்பட்ட தங்களுக்கு லாரி ஓட்டுநர்கள் சிலர் உதவியதாகவும், மின்சாரத் துறை சார்பில் தங்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். மேலும், உணவகங்களும் மூடப்பட்டிருப்பதால் வீட்டிலிருந்தே சிறிதளவு உணவு கொண்டுவந்திருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

இதையும் படிங்க: சட்டத்தை மதிப்போம்: 144 தடை உத்தரவை மீறியவர்கள் உறுதிமொழி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.