காங்கிரஸ் கட்சி கரூர் மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமையில் இன்று (ஜூன் 4) மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரேவிடம் மனு அளித்தனர்.
காங். மனு
அம்மனுவில், "தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் 18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இதனை அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி வழங்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனா மூன்றாவது அலை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இதில் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படக்கூடும் என உலக மருத்துவ அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
கோரிக்கை
எனவே, “தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்தி அதிகளவில் இருப்பு வைத்துக் கொள்ளவும், அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி கிடைத்திட மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஆளுநரை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தி இருப்பதால் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தது.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கரூர் மாவட்ட தலைவர் சின்னசாமி, “இதே கோரிக்கையை வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் மனு அனுப்பியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.