ETV Bharat / state

நிலக்கரி விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்தப்படும் - அமைச்சர் உறுதி - Coal Missing Issue

நிலக்கரி காணாமல்போன விவகாரத்தில் மேட்டூரில் கூடிய விரைவில் ஆய்வு நடத்தப்பட்டு விசாரணை அறிக்கைத் தாக்கல் செய்யப்படும் என மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்துள்ளார்.

coal-missing-issue-an-investigation-will-be-conducted-in-mettur-says-minister-senthilbalaji
நிலக்கரி விவகாரம் தொடர்பாக மேட்டூரில் ஆய்வு நடத்தப்படும்: அமைச்சர் உறுதி
author img

By

Published : Sep 11, 2021, 8:33 AM IST

கரூர்: கரூர் மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுபெற்ற ஆசிரியர், ஆசிரியைகளுக்குப் பாராட்டு விழா தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம் சார்பில் புலியூரிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் செந்தில்பாலாஜி, நல்லாசிரியர் விருதுபெற்ற 10 ஆசிரியர், ஆசிரியைகளுக்குப் பொன்னாடை போர்த்தி பாராட்டி மகிழ்ந்தார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் நான்கு லட்சத்து 52 ஆயிரத்து 777 உழவர்கள் இலவச மின்சார இணைப்பு கேட்டு விண்ணப்பித்து 18 ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர்.

தமிழ்நாடு வரலாற்றிலேயே ஒரே ஆண்டில் ஒரு லட்சம் இலவச மின்சார இணைப்பு வழங்குவது இது முதன்முறை. நடப்பு நிதியாண்டிலேயே ஒரு லட்சம் இணைப்புகளை வழங்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Coal Missing Issue An investigation will be conducted in Mettur says minister senthilbalaji
நல்லாசிரியர் விருதுபெற்றவர்களைப் பாராட்டிய செந்தில்பாலாஜி

இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் நடக்கவிருக்கிறது. அதில் மின்வாரிய அலுவலர்கள் கலந்துகொள்ள உள்ளனர். நிலக்கரி விவகாரத்தில் சென்னை, தூத்துக்குடியில் இருப்பு குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேட்டூர் அனல்மின் நிலையத்தில் நிலக்கரி இருப்பை ஆய்வுசெய்ய வேண்டியுள்ளது. நிலக்கரி காணாமல்போன விவகாரம் தொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட்டு முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு என்ன நடவடிக்கை என்பதை முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

கடந்த ஆட்சியில் நிலக்கரி இருப்பை ஆய்வுசெய்ய இரண்டு குடிமைப் பணி அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

அந்தக் குழு விசாரணை அறிக்கையை கடந்த ஆட்சியிலேயே வெளியிடவில்லை. இந்த முறைகேட்டை மூடிமறைக்கப் பார்த்தார்கள், அது தற்போது எடுபடாது. கரூர் மாவட்டத்திற்கு இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டங்களை முதலமைச்சர் வழங்கியுள்ளார்.

காவிரியின் குறுக்கே இரண்டு இடங்களில் தடுப்பணை கட்ட உத்தரவு பிறப்பிக்கப்பிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவுற்ற பின்னர், அரசாணை வெளியிடப்பட்டு நிதி ஒதுக்கப்படும்.

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றிவருகிறார். கடந்த ஆட்சிக் காலத்தில் முடக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தூசி தட்டி எடுக்கப்பட்டு 100 விழுக்காடு நிறைவேற்றப்படும்" என்றார்.

இதையும் படிங்க: ஊசி போட்டா பரிசு - நத்தம் பேரூராட்சியின் முயற்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.