ETV Bharat / state

அதிமுக- திமுக தொண்டர்கள் மோதல்: கரூரில் பதற்றம்

கரூர்: வெங்கமேடு பகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்யவந்த நாஞ்சில் சம்பத் முன், திமுக- அதிமுக தொண்டர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர்
author img

By

Published : Apr 16, 2019, 5:34 PM IST

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல், 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத் தேர்தல் வாக்குப்பதிவு ஒரேகட்டமாக நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை முடிவடையும் நிலையில், கரூர் பேருந்து நிலையம் அருகே இறுதிகட்ட பரப்புரை செய்ய திமுக - அதிமுக ஆகிய இரு கட்சிகளும் அனுமதி கேட்டிருந்தனர்.

ஆனால் இருகட்சினருக்கும் ஒரே நேரத்தில் அனுமதி வழங்க நீதிமன்றம் மறுத்ததையடுத்து, அதை மேற்கோள்காட்டி இறுதிகட்ட பரப்புரை செய்ய தடை உத்தரவு பிறப்பித்தார் மாவட்ட தேர்தல் அலுவலர் அன்பழகன்.

இந்த உத்தரவையடுத்து துணை ராணுவப்படையினர், காவல் துறையினர் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். பேருந்து நிலையத்திற்குள் வரும் பேருந்துகள், பேருந்து நிலையத்திற்குள் செல்லும் பேருந்துகளுக்கு மாற்று வழித்தடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் மத்திய மண்டல காவல் ஐ.ஜி. வரதராஜன், சரக டி.ஐ.ஜி. லலிதா லட்சுமி, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட காவல் துறையினர் சம்பவ இடத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமலிருக்க தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 5 கி.மீ. தூரமுள்ள வெங்கமேடு என்ற பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக பரப்புரை செய்ய நாஞ்சில் சம்பத் வந்துள்ளார். அப்போது அதிமுக தொண்டர்களும் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கட்சித் தொண்டர்களும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டுள்ளனர்.

நாஞ்சில் சம்பத் முன்னிலையிலேயே இந்த மோதல் நடைபெற்றுள்ளது. அவரது பரப்புரை வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவரையும் தாக்க முயன்றுள்ளனர். ஆனால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாதவண்ணம் நாஞ்சில் சம்பத் அந்த இடத்திலிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இச்சம்பவத்தால் கரூர் பகுதி முழுவதுமே பதற்றமாக உள்ளது. மேலும் கண்ணீர் புகைக்குண்டு வீசும் வஜ்ரா வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள கடைகளை மூட உத்தரவிட்டுள்ளனர். அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கரூரில் பதற்றம்

Intro:Body:

Ban for ADMK election campaign in karur

Intro:கரூர் ரவுண்டானா பகுதியில் அதிமுக காங்கிரஸ் பரப்புரை தடை

Body:நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி கரூர் அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே இறுதிக்கட்ட பிரசாரம் செய்ய தடை உத்தரவு பிறப்பித்தார் மாவட்ட தேர்தல் அலுவலர் அன்பழகன்.

உத்தரவை அடுத்து கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா துணை ராணுவம் மற்றும் காவல் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் பேருந்து நிலையத்திற்குள் வரும் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் செல்லும் பேருந்துகளுக்கு மாற்று வழி தடங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் திருச்சி மண்டல காவல் தலைவர் வரதராஜன் உதவி காவல் தலைவர் லலிதா லட்சுமி கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமலிருக்க தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

இதனால் கரூர் பேருந்து நிலையப் பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது மேலும் கண்ணீர் புகை குண்டு வீசும் வஜ்ரா வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Conclusion:

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.