ETV Bharat / state

குழந்தை திருமணத்துக்கு எதிரான நிகழ்ச்சி - கரூர் எஸ்பி பங்கேற்பு - குழந்தை திருமணத்துக்கு எதிரான நிகழ்ச்சி

குழந்தை திருமணங்களை சட்ட ரீதியாக அங்கீகரிக்க முடியாது. எனவே பொதுமக்கள் இந்நிகழ்ச்சியை விழிப்புணர்வாக கொண்டு சமூகத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி, பெண் கல்வியை ஊக்குவிப்பதற்கும், பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் வகையில் குழந்தை திருமணங்கள் நடத்துவதை கைவிட வேண்டும். இல்லையென்றால் இரும்புகரம் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.

Child marriage awareness program in karur

author img

By

Published : Jul 4, 2021, 3:49 AM IST

கரூர்: குழந்தை திருமணங்கள் நடத்துவோர் மீது அரசு இரும்புக்கரம் கொண்டு அரசு நடிவடிக்கை எடுக்கும் என கரூர் எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கரூர் மாவட்டம் கடவூர் தரகம்பட்டி அருகே உள்ள சக்தி திருமண மண்டபத்தில் ஜூலை 3ஆம் தேதி மாலை குழந்தைகள் திருமணம் தடுப்பு மற்றும் கலப்பு திருமணம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் கலந்துகொண்டு பேசுகையில், நாகரிகமாக வாழ கற்றுக் கொண்ட மனித சமூகத்திற்கு மாற்றங்கள் எப்பொழுதும் இயல்பாக ஏற்றுக் கொள்ளக்கூடியது தான். ஊரடங்கு காலத்தில் கரூர் மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடைபெறுவதை காவல்துறை தடுத்து நிறுத்தியுள்ளது.

குழந்தை திருமணங்களை சட்ட ரீதியாக அங்கீகரிக்க முடியாது. எனவே பொதுமக்கள் இந்நிகழ்ச்சியை விழிப்புணர்வாக கொண்டு சமூகத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி, பெண் கல்வியை ஊக்குவிப்பதற்கும், பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் வகையில் குழந்தை திருமணங்கள் நடத்துவதை கைவிட வேண்டும். இல்லையென்றால் இரும்புகரம் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.

சமூக நலத்துறை கீழ் செயல்படும் மகளிர் சக்தி கேந்திரா நல அலுவலர் சங்கீதா மற்றும் பிரியா, கரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பி.அசோக்குமார், குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் சக்திவேல், பெண்கள் மற்றும் குழந்தைகள் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரி, கடவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி, மாவட்ட சமூக நலத்துறை பாதுகாப்பு அலுவலர் பார்வதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் திருமண தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கடவூர் வாழ்வார்மங்கலம், சின்னான்டிபட்டி,காளயாப்பட்டி, தரகம்பட்டி பகுதியில் உள்ள பெண்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.