கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குழந்தைகள், பாதிக்கப்படத்தக்க குழந்தைகள் தொடர்பான சாட்சிகளை விசாரிப்பதற்கான நீதிமன்ற அறைகள் 3 கோடியே 33 லட்சம் மதிப்பில் 906 சதுர மீட்டர் பரப்பளவில் அமைப்பதற்கு, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி, இன்று ( ஜூலை 18) அடிக்கல் நாட்டு விழா காணொலி காட்சி வழியாக நடைபெற்றது.
இதனை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, கரூர் மாவட்ட நிர்வாக நீதிபதியுமான ராஜா காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி பேசினார். இந்நிகழ்வில், தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.