கரூர்: கரூர் - திருச்சி ரயில் பாதையில் உள்ள லாலாபேட்டை ரயில்வே நிலையம் மிகவும் பழமையானது. இந்த ரயில் நிலையம் அருகே ரயில்வே கேட் குகை பாதை அமைக்கப்பட்டதால் நிரந்தரமாக கேட் மூடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக ரயில்வே கேட்டை திறக்கவில்லை என்றால் ரயில்வே நிலையத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்படும் என ரயில்வே நிலையத்திற்கு மொட்டை கடிதம் ஒன்று நேற்று (நவம்பர் 19) காலை வந்தது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த திருச்சி, கரூர் ரயில்வே காவல் துறையினர், மோப்ப நாய்கள், வெடிகுண்டு வல்லுநர்கள் வரவழைத்து ரயில்வே பாதைகள், வாகனம் நிறுத்துமிடம், கட்டடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் பல்வேறு கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க:jai bhim Issue: 'வன்னியரை இழிவுப்படுத்திய ஜெய் பீம்' - சூர்யா மீது பாமகவினர் புகார்