கரூர்: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” யாத்திரை நிகழ்ச்சியை முடித்துவிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கரூர் வந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான நிலைப்பாட்டை பாஜகவும், பிரதமர் மோடியும் எடுத்து இருப்பதால், பாலஸ்தீன மக்கள் எதிரானவர்கள் அல்ல. இந்தியா நடுநிலை என்ற நிலைப்பாட்டை கையில் தொடர்ந்து எடுத்து வந்தது.
ஆனால் தற்போது, இந்தியாவைப் பொறுத்தவரை பிரதமர் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் போரினால் அவதி கூறும் பாலஸ்தீன மக்களுக்கு துணை நின்று நிவாரணப் பொருட்களை பிரதமர் அனுப்பி வைத்துள்ளார். இந்தியா பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. அதனால்தான் பயங்கரவாதத்திற்கு எதிராக, இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.
தமிழக ஆளுநர் மீது திமுக அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு, தமிழக ஆளுநர் 13 மசோதாவிற்கு கையொப்பமிடவில்லை என திமுக அரசு கூறுகிறது. இவற்றில் 12 மசோதாக்கள் பல்கலைக்கழகங்கள் சம்பந்தப்பட்ட மசோதாக்கள். அனைத்திலும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆளுநர் வசமுள்ள அதிகாரத்தை தமிழக முதலமைச்சர் வசம் ஒப்படைக்கும் வகையில் சட்டம் மசோதா நிறைவேற்றி அனுப்பி உள்ளனர்.
இவை அனைத்துமே இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக உள்ளது. கல்வி மாநில பட்டியலில் இருந்தாலும் ஒன்றிய அரசு கல்வியின் தரம் குறித்து வழிகாட்டுதலை வழங்கும் அதிகாரம் பெற்றுள்ளது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் பல்கலைக்கழகங்களில் அதிகாரம் உள்ள பல்கலைக்கழக வேந்தர் பதவி அரசியல் சார்புடையவர்கள் வசம் இருக்கக்கூடாது என தெரிவித்துள்ளது.
-
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், யார் என்ன எழுதிக் கொடுத்தாலும், அது உண்மையா பொய்யா என்பது தெரியாமல் அப்படியே ஒப்பித்து விடுவார். கடந்த 19 வருடங்களில், தமிழகத்திற்கு 85,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று, இன்று பேசியுள்ளார். அவர் கூறும் 19 வருடங்களில், 2004 - 2013 வரை திமுக… pic.twitter.com/6R0avu6aN7
— K.Annamalai (@annamalai_k) October 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், யார் என்ன எழுதிக் கொடுத்தாலும், அது உண்மையா பொய்யா என்பது தெரியாமல் அப்படியே ஒப்பித்து விடுவார். கடந்த 19 வருடங்களில், தமிழகத்திற்கு 85,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று, இன்று பேசியுள்ளார். அவர் கூறும் 19 வருடங்களில், 2004 - 2013 வரை திமுக… pic.twitter.com/6R0avu6aN7
— K.Annamalai (@annamalai_k) October 31, 2023தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், யார் என்ன எழுதிக் கொடுத்தாலும், அது உண்மையா பொய்யா என்பது தெரியாமல் அப்படியே ஒப்பித்து விடுவார். கடந்த 19 வருடங்களில், தமிழகத்திற்கு 85,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று, இன்று பேசியுள்ளார். அவர் கூறும் 19 வருடங்களில், 2004 - 2013 வரை திமுக… pic.twitter.com/6R0avu6aN7
— K.Annamalai (@annamalai_k) October 31, 2023
ஆனால் தமிழக அரசு நிறைவேற்றியுள்ள 12 மசோதாக்கள் ஆளுநர் வசம் உள்ள பல்கலைக்கழக வேந்தர் பதவியை பறித்து தமிழக முதலமைச்சரே நிர்வகிக்கும் வகையில் வெவ்வேறு பல்கலைக்கழகங்கள் என்பதால் 12 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் வசமுள்ள 12 பல்கலைக்கழக மசோதாக்கள் தவிர மீதமுள்ள சித்த மருத்துவ மசோதா என்பது நீட் நுழைவுத் தேர்வு போல தமிழக அரசு நுழைவுத் தேர்வு ஒன்று நடத்தி சித்த மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என திருத்தம் செய்து மசோதா நிறைவேற்றியுள்ளனர்.
இந்த மசோதா உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மசோதா என்று வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 66 இன் படி ஒன்றிய அரசின் வசமுள்ள கல்விக்கான தர நிர்ணய வழிகாட்டுதலுக்கு முழு அதிகாரம் என்று நீதிமன்றமே உறுதி செய்துள்ளது. தமிழக அரசு சித்த படிப்புக்கு என புதிதாக ஒரு மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்துவது என்பது நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு எதிரானது என கருதி ஆளுநர் மசோதாவை கையொப்பம் விடாமல் நிறுத்தி வைத்துள்ளார்.
இதை தமிழக மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு ஏன் வெளியிடவில்லை. தமிழக ஆளுநர் 13 மசோதாக்களுக்கு அனுமதி தரவில்லை என்று பொய்யான பிரச்சாரத்தை செய்து விட்டு, தற்போது ஆளுநருக்கு எதிராக நீதிமன்றம் செல்வதாக நாடகமாடி வருகின்றனர்.
ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திரபாபு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக தேர்வு செய்வதற்கு அனுப்பப்பட்ட ஆவணத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு, திமுகவினர் மேடை அமைத்து வசை பாடி வருகின்றனர். ஆனால் 62 வயது வரை மட்டுமே தலைவர் பதவி வகிக்க முடியும் என தெரிந்தும் எட்டு மாதம் முதல் 12 மாதங்கள் வரை மட்டுமே பதவி வகிக்க கூடிய பொறுப்பை சைலேந்திரபாபுக்கு ஏன் வழங்க வேண்டும் என்று ஆளுநர் வெளிப்படையாக பத்திரிகைகளுக்கு செய்தியாக வழங்கி உள்ளார்.
தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகள் வெளிப்படையாக இல்லை. புதிதாக டிஎன்பிஎஸ்சி உறுப்பினராக சிவக்குமார் என்ற நபரை தமிழக அரசு பரிந்துரை செய்தது. அவர் நிர்வகித்து வந்த கல்வி நிறுவனம் ஒன்றில் முறையான கல்வி நிர்வாகம் நடத்தவில்லை என பதவி நீக்கம் செய்யப்பட்டவர்.
சிவக்குமாரை உறுப்பினராக பரிந்துரை செய்த தமிழக அரசின் விவகாரம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கான பேர் அரசு பணிக்காக எழுதும் தேர்வை சிவக்குமாரால் நேர்மையாக எப்படி நடத்த முடியும் என ஆளுநர் கேள்வி எழுப்பியதில் என்ன தவறு? தமிழ்நாடு அரசு நடவடிக்கையிலும் ஆளுநர் தலையீடு செய்யவில்லை என்பதை தெளிவாக குறிப்பிட விரும்புகிறேன்" என்று அண்ணாமலை கூறினார்.
இதையும் படிங்க:தூத்துக்குடி அருகே மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவர்.. நடந்தது என்ன?