தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும், பொதுமக்களும், திரையுலகப் பிரபலங்களும் தங்களது வாக்கினைச் செலுத்தினர்.
அந்த வகையில், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தொட்டியபட்டி அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் படித்த அரசுப் பள்ளியில் இன்று வாக்களிப்பதற்காக வந்திருக்கிறேன். எனக்கு இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
சட்டப்பேரவையில் சரியான நபர்கள் அமர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும், அந்த அரசியல் மாற்றத்திற்கான தேர்தல் இந்தத் தேர்தல்.
அரவக்குறிச்சித் தொகுதியின் மண்ணின் மைந்தன் இத்தொகுதியில் நான் நிச்சயம் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’அனைவரும் வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும்’ - முதலமைச்சர் வேண்டுகோள்