கரூர் மாவட்டம் தரங்க வெண்ணைமலை பகுதி அருகே உள்ள கலைமகள் நகர் பகுதியில் வசிப்பவர் பிரபு. கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் கணினி பிரிவில் பணியாற்றி வரும் இவரும் இவரது மனைவியும் தங்களின் வீட்டை காலையில் பூட்டிவிட்டு பணிக்குச் சென்றனர்.
மாலையில் வீடு திரும்பிய பிரபு, வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து பீரோவில் இருந்த 30 சவரன் நகை, பத்தாயிரம் ரூபாய் ரொக்கம், வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் உள்ளிட்டவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து வெங்கமேடு காவல் நிலையத்தில் பிரபு புகார் அளித்தார். அதன்பேரில் வீட்டில் சோதனை நடத்திய காவலர்கள், தடையங்களைக் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் படிக்க: பீடிப் புகையால் ஏற்பட்ட தகராறு - கொலையில் முடிந்த அவலம்!