கரூர் மாவட்டம் தொழில்பேட்டை ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா (35). இவர், புலியூர் அருகேவுள்ள வீரராக்கியம் குளத்துப்பாளையம் அங்கன்வாடி மையத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இன்று (பிப்.27) காலை 11 மணியளவில் அங்கன்வாடி மையத்தில் பணிக்குச் சென்ற அவர், தான் தற்கொலை செய்யப்போவதாக கடிதம் எழுதியுள்ளார். அதில், தனது தற்கொலைக்குக் காரணம் உயர் அலுவலர்கள் தான் என எழுதியுள்ளார். மேலும், தன்னை அவமானப்படுத்தியதால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வீடியோவை ஒன்றையும் பதிவு செய்து, வாட்ஸ் ஆப் மூலம் மற்றவர்களுக்கு அனுப்பியுள்ளார்.
அந்த வீடியோவில், தனக்கு உடல் நிலை சரியில்லாதபோது தொடர்ந்து பணியாற்றக் கோரி வற்புறுத்தியதாகவும், பணி மாறுதல், சம்பளக் குறைப்பு மேற்கொள்வேன் என்ற உயரலுவலர்கள் இருவர் பெயரை குறிப்பிட்டு மிரட்டியதாகவும், தன்னை தொடர்ந்து அவமானப் படுத்தியதால் தான் தற்கொலைக்கு முயல்வதாக தெரிவித்துள்ளார்.
பின்னர், அங்கிருந்து கிளம்பிய சந்தியா இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சாலையில் மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பணி அழுத்தம் காரணமாக சந்தியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுவதால் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் உமா, இளநிலை உதவியாளர் திலகவதி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உடன் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர் சுகுணா புகார் அளித்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த வெள்ளியணை காவல் துறையினர், குற்றஞ்சாட்டப்பட்டவர்ளிடம் தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வீட்டு வாடகை பிரச்னையால் பெண் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சி