கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட பிரதிநிதி குணசேகர், திருக்காம்புலியூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் இன்று கரூர் அதிமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளரும் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
புதிய நிர்வாகிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் தோளில் துண்டு அணிவித்து வரவேற்றார். இதில் அதிமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் கணேசன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.