கரூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து அறுவடை பணிக்காக நேற்று முன்தினம் புதிய வாய்க்காலில் 440 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து நேற்று காலை ஏழு மணி நிலவரப்படி அணையிலிருந்து வினாடிக்கு 1,250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று 7 மணி நிலவரப்படி 1132.57 கனஅடி நீர் அமராவதி ஆற்றில் செல்கிறது. மேலும் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்து 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 50.59 அடியாக உள்ளது.
கார்வழி ஆற்றுப்பாலம் தடுப்பணைகளில் வரத்து குறைந்ததால் தண்ணீர் வரத்து நின்றது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 17. 98 அடியாக உள்ளது. மேலும், நொய்யல் வாய்க்காலிலிருந்து வினாடிக்கு130 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 1,490 கன அடி தண்ணீர் வந்தது. காவிரி ஆற்றில் 820 கனஅடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில் 670 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. அறுவடைக்காக மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களும், விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணையில் குறைந்த நீர்மட்டம்: மூவர் குழுவினர் ஆய்வு!