ETV Bharat / state

'மின்வாரிய கடன் தொகையை உயர்த்தியது அதிமுக அரசு தான்' - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி! - மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்

’’அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் மொத்த மின்தேவையில் மூன்றில் இரண்டு பங்கு வெளிச்சந்தையில் கொள்முதல் செய்து ஆண்டுக்கு 16,500 கோடி ரூபாய் மாதம் வட்டி செலுத்தக்கூடிய நிலைக்குத்தள்ளியது அதிமுக அரசுதான்” என அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

’மின்வாரிய கடன் தொகையை உயர்த்தியது அதிமுக அரசு தான்’- அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!

author img

By

Published : Jul 26, 2022, 4:41 PM IST

கரூர்: கரூரில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். முன்னதாக கரூர் மாநகராட்சி வளாகத்தில் சென்னை 44ஆவது ஒலிம்பியாட் சதுரங்கப் போட்டி குறித்து பள்ளி மாணவ மாணவர்களுக்கான விழிப்புணர்வுப் பேரணியை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

பின்னர் பேரணி கரூர் மாநகராட்சி வளாகத்தில் தொடங்கி, ஜவஹர் பஜார், கடைவீதி வழியாக திருவள்ளுவர் மைதானம் வரை அமைச்சர் செந்தில் பாலாஜி மாணவ-மாணவிகளுடன் பேரணியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

’மின்வாரிய கடன் தொகையை உயர்த்தியது அதிமுக அரசு தான்’- அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!

பின்னர் கரூர் மாவட்ட அளவில் சதுரங்கப்போட்டிகளில் வெற்றிபெற்ற அரசுப்பள்ளி மாணவர்களைப்பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயங்களை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கி பாராட்டுத்தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தமிழ்நாட்டின் மின் நுகர்வோரிடம் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும். அப்போது மின்வாரியம் மூலம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் செய்தி பரவி வருவது தவறான செய்தி’ என மறுப்புத் தெரிவித்தார்.

மேலும் அவர், 'நேற்று சைதாப்பேட்டையில் நடைபெற்ற மின்வாரியக் கூட்டத்தில் தெளிவாக இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குடிசை மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்புப்பெற்றுள்ள 3 கோடியே 37 லட்சம் மின்நுகர்வோரில் ஒரு கோடி மின் நுகர்வோருக்கு எவ்வித மாற்றமும் இன்றி கட்டணம் ஜீரோ என்ற நிலையில் உயர்த்தப்பட்டுள்ளது. ஏழை எளிய அடித்தட்டு நுகர்வோர் பாதிக்கப்படாத வண்ணம் முதலமைச்சர் இதற்காகத் தனிக் கவனம் செலுத்தியுள்ளார்.

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டிருப்பதற்கு கட்டணமோ வாடகையோ நிச்சயம் வசூலிக்கப்படாது. மின் பயன்பாடு 100 யூனிட் முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தும் மின் நுகர்வோர் 63 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு இரு மாதத்திற்கு ஒரு முறை 55 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இது ஒரு மாதத்திற்கு 27.50 பைசா மட்டுமே மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது’ எனவும் தெரிவித்தார்.

மின்சார வாரியத்தில் கடன் தொகை அதிகமாக உள்ளது என அதிமுக கூறி வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, 'அடுத்ததாக கடன் சுமையை இவ்வளவு அதிகம் உயர்த்தியது யார்? ஒரு லட்சத்து 59 ஆயிரம் கோடி எந்த ஆட்சிக்காலத்தில் மின்வாரிய கடன் தொகை உயர்த்தப்பட்டது?'' என எழுப்பப்பட்ட மறுகேள்விகேட்டு ”ஆண்டுக்கு 16,500 கோடி மாதம் வட்டி செலுத்தக்கூடிய நிலைக்குத்தள்ளியது அதிமுக அரசுதான்” எனப் பதிலளித்தார்.

’அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டின் மொத்த மின்தேவையில் மூன்றில் இரண்டு பங்கு வெளிச்சந்தையில் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், தற்பொழுது தமிழ்நாட்டின் மொத்த மின் தேவையை நமக்கு நாமே உற்பத்தி செய்து வருகிறோம். அதிக விலை கொடுத்து மின்சாரத்தை கொள்முதல் செய்து தமிழ்நாடு மின்மிகை மாநிலமாகத் திகழ்ந்தது என்று பொய்யான செய்தியை அதிமுகவினர் பரப்பிவந்தனர். அப்படி எனில், ஏன் தமிழ்நாட்டில் இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகளை வழங்கவில்லை?’ எனக் கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசைக் கண்டு பயப்படும் அதிமுக: ’திமுக அரசு பொறுப்பேற்றவுடன் தற்பொழுது ஒரு லட்சம் இலவச மின் இணைப்புகளை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற நிர்வாக சீர்கேடு காரணமாக இழுத்து மூடும் நிலையில் இருந்தது. குறிப்பாக மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய மானியம், வங்கிகள் வழங்க வேண்டிய கடன்கள் மறுக்கப்பட்ட சூழ்நிலை தான் நிலவி வந்தது’ எனக் கூறினார்.

'இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 2011, 2012, 2013, 2014ஆம் ஆண்டுகளில் 37 விழுக்காடு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அவர்கள் உயர்த்தி வைத்த கட்டணத்தை மறைத்துவிட்டு பொய்யான, உண்மைக்குப் புறம்பான தகவல்களை மக்களிடத்திலே பேசி வருகின்றனர்' என்றார்.

'மின்வாரிய கடன் தொகையை உயர்த்தியது அதிமுக அரசு தான்' - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!

'2010ஆம் ஆண்டு 410 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டர் விலை தற்பொழுது 1120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 2014ஆம் ஆண்டு 54 ரூபாய்க்கு விற்கப்பட்ட டீசல் தற்பொழுது 94 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்று அதிமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஏன் பெட்ரோல், டீசல் கேஸ் விலை உயர்வு குறித்துப் பேசவில்லை.

மத்திய அரசைக் கண்டு அதிமுக பயப்படுகிறது. மத்திய அரசை எதிர்க்கக்கூடிய தைரியம் இல்லாத சூழ்நிலையில் அதிமுக இருக்கிறது' எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுக அரசுக்கு எதிராக நடைபெறும் ஆர்ப்பாட்டமா? அல்லது ஓபிஎஸ்-க்கு எதிரான ஆர்ப்பாட்டமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.