கரூர் மாவட்ட அதிமுகவின் மூத்த நிர்வாகியும் முன்னாள் கரூர் மாவட்ட கழகச் செயலாளருமான சாகுல் ஹமீது கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
இவர் தனது மாணவப் பருவத்திலேயே எம்ஜிஆரால் ஈர்க்கப்பட்டவர். பின்னர் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு, மாணவப் பொறுப்பு முதல் மாவட்டச் செயலாளர் வரை பதவி வகித்தவர்.
தற்போது உடல் நலக்குறைவால் மருத்துவ சிகிச்சைப் பெற்று வந்த இவர் சிகிச்சைப் பலனின்றி காலமானார்.