திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, கரூர் மாவட்ட திமுக சார்பில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, தனது சொந்த நிதியிலிருந்து மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பட்டினியில் இருந்து மீட்கும் வகையில், ரூபாய் 550 மதிப்புள்ள 5 கிலோ அரிசி மூட்டை, துவரம் பருப்பு 1 கிலோ, புளி ¼ கிலோ, சமையல் எண்ணெய் ½ லிட்டர், உப்பு 1 கிலோ, மிளகு 50 கிராம், சீரகம் 100 கிராம், கடுகு 100 கிராம், மஞ்சள் தூள் 100 கிராம், சாம்பார் தூள் 100 கிராம், வர மிளகாய் 150 கிராம், பூண்டு ¼ கிலோ ஆகிய 12 வகையான மளிகைப் பொருட்களை இலவசமாக வழங்கும் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: 'பாதி கொடுத்தாலே போதும்' - கரோனாவிலிருந்து தமிழ்நாடு கரையேறிவிடும்!