மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நிணைவஞ்சலி நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 7) அனுசரிக்கப்பட்டது. கரோனா வைரஸ் காலகட்டம் என்பதால் மத்திய, மாநில அரசுகள் 144 தடை உத்தரவு பிறப்பித்து, ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் அதிகம் ஒரே இடத்தில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தடையை மீறி கருணாநிதி நினைவு தினத்தில் பங்கேற்றதாக கரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 5 வழக்கின் கீழ் 55 நபர்களும், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 3 பிரிவின் கீழ் 90 நபர்களும், தாந்தோனிமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 4 பிரிவின் கீழ் 52 நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
மேலும், வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 55 நபர்களும், வாங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 10 நபர்களும், மாயனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஐந்து நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மாவட்டம் முழுவதும் 267 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், பரவிவரும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட அனைவரும் காவல் நிலையத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டு (காவல் நிலைய ஜாமீன்), அனுப்பி வைக்கப்பட்டனர்.