ETV Bharat / state

கரூரில் பூட்டிய வீட்டில் 20 சவரன் தங்க நகைகள் கொள்ளை

கரூர் வாங்கல் அருகே பகலில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

20-sovereign-gold-theft-in-house-near-karur
கரூரில் பூட்டிய வீட்டில் 20 சவரன் தங்க நகை கொள்ளை
author img

By

Published : Aug 2, 2021, 1:36 AM IST

கரூர்: மண்மங்கலம் அருகே உள்ள மேற்குகூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன்(58). இவர், கரூர் வட்டார வளர்ச்சி கல்வி அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பவுன்(50) தளவாபாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு விக்னேஷ் கண்ணன்(26) என்ற மகனும், ஜீவிதா(25) என்ற மகளும் உள்ளனர்.

நேற்று(ஆகஸ்ட் 1) காலை லோகநாதன் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், லோகநாதனின் மனைவி தனது மகன், மகனை அழைத்துக் கொண்டு தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், கரூர் சென்றுவிட்டு வீடு திரும்பிய லோகநாதன் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த சுமார் 20 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

திருட்டு குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கைரேகை நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்தனர். இச்சம்பவத்தில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 சவரன் நகைகள் மட்டும் கொள்ளையடிக்கப்பட்டதும், மற்றொரு அலமாரியில் வைக்கப்பட்ட 30 சவரன் தங்க நகைகள் களவு போகாமல் தப்பியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பட்டப்பகலில் பூட்டபட்ட வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த நகைகள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சாலையில் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி - பதறவைக்கும் சிசிடிவி காட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.