தேனி மாவட்டம் அன்னை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த விசுவநாதன் (25), அதே பகுதியைச் சேர்ந்த வினோத் (20) ஆகிய இருவரும் ஈரோட்டில் வெல்டிங் பணி செய்துவந்தனர். பொங்கலை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்ல முடிவு செய்த இருவரும் கரூர் வழியாக பயணிக்க முடிவு செய்தனர்.
வினோத் வாகனத்தை ஓட்ட விசுவநாதன் பின்னால் அமர்ந்து பயணித்துள்ளார். இவர்கள் சென்ற இருசக்கர வாகனம் கரூர் அரவக்குறிச்சி அருகே வந்தபோது, மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேராக மோதியது. எதிரே வந்த வாகனத்தை, அரவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி செல்லமுத்து ஓட்டியுள்ளார். செல்லமுத்துவுடன் அவரது மனைவி லதாவும் பயணித்திருக்கிறார்.
இந்த விபத்தில் விசுவநாதன் தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாகனத்தை ஓட்டிவந்த வினோத், செல்லமுத்து, அவரது மனைவி லதா ஆகிய மூவருக்கும் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது செல்லமுத்து மற்றும் லதா ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இவர்களது உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குறித்து அரவக்குறிச்சி காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்!