இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதியளித்ததைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்து வந்த தமிழ்நாடு தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு வரத் தொடங்கியுள்ளனர். அவ்வாறு வரும் தொழிலாளர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள்.
மேலும், அவர்கள் கரோனா பரிசோதனைக்கும் உட்படுத்தப்படுகிறார்கள். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி திரும்பிய 16 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் கரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 72ஆக உயர்ந்துள்ளது.
கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்க, கடவூர் தரங்கம்பாடியில் போதிய பாதுகாப்பு இல்லாமல் அப்பகுதி மக்கள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள், தரங்கம்பாடி ஊராட்சி அலுவலகத்தில் வெட்டவெளியில் மக்களுடைய ரத்தம், சளி மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. இதனால், தொற்று இல்லாதவர்களுக்கும் தொற்று பரவ வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட வடமாநிலத்தவர்கள்