கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தைச் சேர்ந்தவர் வினோத் டி.ஜான். இவர் இன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். மாவட்ட ஆட்சியரை சந்திப்பதற்காக சென்ற நிலையில் அவரின் உதவியாளர்கள், நீங்கள் முகக்கவசம் அணியவில்லை. அதனால் முகக்கவசம் அணிந்துவிட்டு வாருங்கள் என்று கூறி அனுப்பியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து வினோத்தும் முகக்கவசம் வாங்கிக்கொண்டு மீண்டும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க சென்றார். அப்போது மாவட்ட ஆட்சியர் அவரை சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் வேதனையடைந்த அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இவரது நிலத்தில் கோயில் கட்டப்பட்டு உள்ளதாகவும், அதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் சந்திக்க மறுத்ததால் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதாக அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: கயத்தாறு அருகே பட்டியலின நபரை காலில் விழ வைத்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது!