ETV Bharat / state

இருசக்கர வாகனத்தில் குறுக்கே மாடு வந்ததால் இளைஞர் உயிரிழப்பு

author img

By

Published : Nov 30, 2020, 2:58 PM IST

கன்னியாகுமரி: மேக்காமண்டபம் அருகே இருசக்கர வாகனத்தின் குறுக்கே மாடு பாய்ந்ததால் பொறியியல் பட்டதாரி இளைஞர் உயிரிழந்தார்.

bike accident youth death
bike accident youth death

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே மாத்தார், செம்பிறாவிளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் அபிசோன் (23) பொறியியல் படித்துள்ளார். இவர் அழகியமண்டபத்தில் தலைக்கவசம் விற்பனை செய்யும் கடை நடத்திவந்தார்.

குறுக்கே மாடு வந்ததால் இளைஞர் உயிரிழப்பு

இவர் திருவட்டாரிலிருந்து அழகியமண்டபம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இருசக்கர வாகனம் பூவன்கோடு பகுதியில் செல்லும்போது எதிர்பாராதவிதமாக மாடு ஒன்று சாலையின் குறுக்கே பாய்ந்துள்ளது. இதில் தடுமாறி இருசக்கர வாகனம் அப்பகுதியிலுள்ள புளியமரத்தின் மீது மோதியது. மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட அபிசோன் படுகாயமடைந்தார்.

உடனடியாக அப்பகுதியினர் அவரை மீட்டு ஆற்றூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். அங்கு சென்ற சிறிது நேரத்தில் மருத்துவம் பலனின்றி அவர் இறந்தார்.

இது குறித்து திருவட்டார் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மாடு மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளாகும் சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தொழிலாளர்களை விட்டுவைக்காத லாட்டரி: நடவடிக்கைகள் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.