ETV Bharat / state

எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் அதிமுக இருக்கிறதா? அமைச்சர் ரகுபதி விமர்சனம்! - MINISTER RAGHUPATHY

எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரகுபதி, எடப்பாடி பழனிசாமி
அமைச்சர் ரகுபதி, எடப்பாடி பழனிசாமி (ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 10, 2025, 4:54 PM IST

சென்னை: எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், மாநிலச் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி 1,15,709 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. திமுகவின் நான்கு ஆண்டு கால ஆட்சியில் ஆட்சிக்கு எதிரான அலை இல்லை, ஆதரவு அலை தான் வீசுகிறது என்று இதன் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.

2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 34,817 வாக்குகள் பெற்றது. அந்த வாக்குகள் அனைத்தும் தற்போது திமுகவுக்கு கிடைத்திருக்கிறது. அதிமுக தொண்டர்களும் இன்றைக்கு திராவிட இயக்கத்தை நிலை நிறுத்த கூடிய ஆட்சி தலைவர் தளபதினுடைய ஆட்சி என்பதை உணர்ந்து திமுகவிற்கு வாக்களித்துள்ளனர். எப்போதும் வேறு யாருக்கும் ஓட்டு போடாத மாற்றுக்கட்சிக்காரர்கள் கூட திமுகவிற்கு வாக்களித்திருக்கிறார்கள். அந்த வாக்குகள் அனைத்தும் திமுக கூட்டணிக்கு கிடைத்திருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் அதாவது 11 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்திருக்கிறது. தொடர் தோல்வி அடைந்த ஒரு அரசியல் தலைவர் அவராகத்தான் இருக்க முடியும். இதிலிருந்து அதிமுகவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு அவருக்கு எந்தவிதமான தகுதியும் இல்லை என்பது நிரூபணம் ஆகி உள்ளது. அங்கு இருக்கக்கூடிய தலைவர்கள் எல்லாமே வெறுப்போடு இருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி, பாஜக கொண்டு வரும் திட்டங்களை மறைமுகமாக ஆதரிப்பார், வெளியில் பாஜகவை எதிர்பதுபோல நடிப்பார். ஈரோடு கிழக்கு தேர்தலில் முதல்வரின் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. எங்களின் திட்டங்களை பார்த்து திமுகவுக்கு வாக்களித்துள்ளார்கள் என்றால், மக்கள் திராவிட மாடல் ஆட்சியை வரவேற்கிறார்கள் என அர்த்தம்.

திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் தான் அத்திக்கடவு அவிநாசி திட்டம் முழுமையாக முற்றுப்பெற்றிருக்கிறது. எடப்பாடி பழனிசாமிக்கு எந்த பயமும் கிடையாது என்பது தவறு, கட்சி அவரது கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்பது அவரின் முன்னாள் அமைச்சர்களின் பேச்சுகள் எடுத்துக்காட்டாக உள்ளது. கட்டுப்பாட்டில் கட்சியை கொண்டு வருவதற்கு படாத பாடு பட்டு கொண்டிருக்கிறார்.

சீமான் மீது அவதூறு வழக்குகள் பதிவு செய்து விட்டு நீதிமன்றத்திற்கு சென்று அங்கே வழக்கு தொடர்ந்து கொள்ளலாம். கைது பண்ண வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜராகி குற்றவாளி அல்ல, அவதூறாகப் பேசவில்லை என்பதை நிரூபித்தாக வேண்டும். அவர் அவதூறாகப் பேசினார் என்பது வழக்கு பதிந்து இருக்கும் போது அவர் நீதிமன்றத்திற்கு வந்ததாக வேண்டும்.

இந்து, முஸ்லிம் மக்கள் ஒன்றாக தான் தமிழ்நாட்டில் உள்ளனர். புதிதாக மத கலவரத்தை உருவாக்க யாரும் நினைத்தாலும் அதற்கு இடம் கொடுக்க மாட்டோம். நாங்கள் அனைவரையும் சமமாக பார்க்கிறோம். யாரும் யாரையும் ஏமாற்றி விட முடியாது. அந்த பிரச்சனையை எவ்வாறு சுமூகமாகத் தீர்க்க வேண்டும் என முதலமைச்சருக்கு தெரியும். முதலமைச்சர் அதனை சுமூகமாக தீர்ப்பார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டு பொய்யானது; போலியானது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு தைரியம் வந்துள்ளது, தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை நீதிமன்றத்திலோ காவல் நிலையத்திலோ புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கக்கூடிய காலம் இதுதான் என்பதை உணர்ந்து பெண்கள் புகார் கொடுக்க முன் வந்திருக்கிறார்கள். பொள்ளாச்சி சம்பவங்கள் 14 நாள் காத்திருந்து அப்போது கூட முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. பெண்கள் அச்சப்பட்டார்கள். அதிமுக ஆட்சியில் அந்த கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்ய மாட்டார்கள் என அச்சம் அடைத்து பெண்கள் வெளியே வந்து புகார் கொடுக்க தயங்கினார்கள்.

இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.