கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கோடிமுனை பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ். இவரது மகள் சந்தியா. சந்தியாவிற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு முட்டம் பகுதியை சேர்ந்த ஜான் ஜியோ என்பவருடன் திருமணம் நடைப்பெற்றது. இந்நிலையில், ஜனவரி 15ஆம் தேதி உடல்நிலை சரியில்லாத தனது தாயாரை கவனிக்க சந்தியா கோடிமுனைக்கு வந்தவந்தார். பின் அங்கேயே தங்கி சந்தியா தனது தயாரை கவனித்து வந்துள்ளார்.
![missing](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-knk-02-young-married-women-missing-image-7203868_04022021152317_0402f_1612432397_947.jpg)
இதையடுத்து சந்தியா தனது கழுத்திலிருந்த 5 சவரன் தாலி, காதில் அணிந்திருந்த கம்மல் உள்ளிட்டவைகளை கழட்டி வைத்து விட்டு வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார். உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சந்தியாவை கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் இதுகுறித்து உறவினர்கள் குளச்சல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சந்தியாவை தேடி வருகின்றனர். திருமணம் நடந்து முடிந்து நான்கு மாதத்தில் புதுப்பெண் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.