ETV Bharat / state

கணவர் கூறிய அந்த வார்த்தை: மனைவி தற்கொலை? - husband and wife fight

கன்னியாகுமரி: கணவன் கோபத்தில் கூறிய வார்த்தையால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Food issue wife suicide
Food issue wife suicide
author img

By

Published : Mar 15, 2021, 2:48 PM IST

Updated : Mar 15, 2021, 5:42 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு மேலத்தெருவைச் சேர்ந்தவர்கள் நாகராஜன் (28), ஷிவானி (22) தம்பதி. இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நாகராஜன், நாகர்கோவில் ஆயுதப்படையில் பணிபுரிந்து வருகிறார்.

ஷிவானியின் சமையல் கைப்பக்குவம் நாகராஜனுக்கு பிடிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் கணவன், மனைவிக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு நாகராஜன் பணிக்கு செல்வதற்கு முன் சாப்பிட அமர்ந்துள்ளார். ஷிவானி பரிமாறிய உணவின் சுவை நாகராஜனை ஈர்க்கவில்லை என்பதால், சமையல் சரியில்லை எனக் கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த ஷிவானி அறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டுள்ளார். வெகுநேரமாகியும் அறைக்குள்ளிருந்து ஷிவானி வெளியே வராததால், சந்தேகமடைந்த உறவினர்கள் அந்த அறையை திறந்து பார்த்துள்ளனர். அப்போது ஷிவானி தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கன்னியாகுமரி ஆய்வாளர் ஆவுடையப்பன், தென்தாமரைகுளம் உதவி காவல் ஆய்வாளர் ஜான் கென்னடி ஆகியோர் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். நாகராஜனுக்கும், ஷிவானிக்கும் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆகியுள்ளதால் அகஸ்தீஸ்வரம் வட்டார ஆர்.டி.ஓ. மயில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகிறார்.

இதையும் படிங்க:கொடைக்கானலில் மிதிவண்டி திருடிய கேரள இளைஞர்கள் கைது!

Last Updated : Mar 15, 2021, 5:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.