நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றனர். அதில்காங்கிரஸ் கட்சிக்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பும் தொண்டர்களுக்கான விருப்ப மனு மாவட்ட காங்கிரஸ் அலுவலகங்களில் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொடுக்கப்பட்ட முதல் விருப்ப மனுவினை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெயரில் பெறப்பட்டுள்ளது.
மேலும் ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.