கன்னியாகுமரியை அடுத்த வடக்குகுண்டலை சேர்ந்தவர் ஜான்சி (35). இவருக்கும் தென்தாமரைகுளத்தை சேர்ந்த சுதன் (36) என்பவருக்கும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லை. இருவரும் வடக்கு குண்டலிலுள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஜான்சி திடீரென்று மாயமானதாகத் தெரிகிறது. மனைவியை பல இடங்களில் தேடிய, சுதன் அவரை கண்டுபிடிக்க முடியாததால் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், மனைவி சென்ற விரக்தி சுதனை வாட்டி எடுத்துள்ளது. இதனையடுத்து இன்று வடக்கு குண்டலிலுள்ள மாமனார் வீட்டிற்கு அவர் சென்றுள்ளார்.
மின்சாரம் தாக்கி ஆண் யானை பரிதாபமாக உயிரிழப்பு!
அங்கு சென்ற சுதன், பின்புறமுள்ள புளிய மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கன்னியாகுமரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி மாயமான சோகத்தில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.