ETV Bharat / state

'எங்களை எப்படியாவது காப்பாத்துங்க' - ஈரானில் தவிக்கும் தமிழ்நாடு மீனவர்கள் - WhatsApp video released by Kumari fishermen stranded in Iran

குமரி: மாவட்டத்தில் இருந்து ஈரானுக்கு மீன்பிடிக்கச் சென்று, தற்போது அங்கு வைரஸ் பாதிப்பால் சிக்கித்தவிப்பதாகவும், தங்களை உடனடியாக மீட்கும்படியும் மீனவர்கள் வாட்ஸ்அப்பில் இரண்டாவது காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

'ஈரானில் தவிக்கும் குமரி மீனவர்கள்' -   தற்போது வெளியிட்டுள்ள வாட்ஸ் ஆப் வீடியோ

author img

By

Published : Mar 3, 2020, 12:39 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள், ஈரான் நாட்டு அரேபிய முதலாளியிடம் ஒப்பந்தப் பணியாளராக இருந்து மீன் பிடிப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஈரான் நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் மீனவ மக்களுக்கு வைரஸ் தொற்றிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

ஆனால், மீன் பிடிப்பதற்கு அரேபிய முதலாளி தொடர்ந்து வற்புறுத்திவரும் நிலையில், தங்களை மீட்கும்படி சமீபத்தில், வாட்ஸ்அப் மூலம் மீனவர்கள் காணொலி ஒன்றை வெளியிட்டு இருந்தனர். அந்த காணொலியைத் தொடர்ந்து, நெய்தல் எழுச்சி பேரவையினரும் மீனவ குடும்பத்தினரும் அவர்களை மீட்குமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்துள்ளனர். இந்நிலையில், தற்போது அங்கு சிக்கித் தவிக்கும் மீனவர்கள் இரண்டாவது காணொலியைப் பதிவிட்டுள்ளனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, "இங்கு தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் எங்களை நாங்கள் தற்காத்துக் கொள்வதற்கு முடிந்த அளவு பாடுபடுகிறோம். இது எவ்வளவு நாள் நீடிக்கும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. இந்தியா தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் எங்களுக்கு பாதிப்பு உண்டாகும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

'ஈரானில் தவிக்கும் குமரி மீனவர்கள்' - ஏற்கெனவே வெளியிட்ட வாட்ஸ் அப் வீடியோ

மேலும், " நாங்கள் கடைக்குச் செல்லவேண்டும் என்றால், 20 கிலோ மீட்டர் நடந்து சென்று வரும் சூழ்நிலையில் உள்ளோம். உணவுப் பொருட்கள், சமையல் பொருட்கள் தீர்ந்து வருகிறது. ஏற்கெனவே நான்கைந்து படகுகளில் தீர்ந்துவிட்டது. இருக்கும் பொருட்களை வைத்து நாங்கள் சமாளித்து வருகிறோம். எங்களிடம் மருந்துப் பொருட்கள் இல்லை. ஒரு மாஸ்க் வாங்க கூட இயலாத நிலையில் உள்ளோம். எனவே இந்தியப் பிரதமரும், தமிழ்நாடு முதலமைச்சரும் நடவடிக்கை எடுத்து வெகு விரைவில் எங்களை மீட்டு தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர்கள் கூறியுள்ளனர்.

'ஈரானில் தவிக்கும் குமரி மீனவர்கள்' - தற்போது வெளியிட்டுள்ள வாட்ஸ் அப் வீடியோ

இதையும் படிங்க:

ஈரான் நாட்டின் தனி தீவில் தவிக்கும் தமிழ்நாடு மீனவர்கள் - வெளியான வாட்ஸ் ஆப் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.