ETV Bharat / state

'வேலை செஞ்சுடுவியா நீ...’ அதிமுக கவுன்சிலரை மிரட்டும் திமுக ஒன்றிய செயலாளரின் வீடியோ - latest tamil news

கன்னியாகுமரியில் அதிமுக கவுன்சிலரை பணி செய்ய விடாமல் மிரட்டுவதாக, திமுக ஒன்றிய செயலாளரின் வீடியோ வைரலாகி வருகிறது.

திமுக ஒன்றிய செயலாளரின் வைரல் வீடியோ
திமுக ஒன்றிய செயலாளரின் வைரல் வீடியோ
author img

By

Published : Dec 22, 2022, 3:39 PM IST

திமுக ஒன்றிய செயலாளரின் வைரல் வீடியோ

கன்னியாகுமரி: தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டப் பகுதிகளில் ஒன்று தான், தடிக்காரன்கோணம். இந்த வார்டில் மீன் சந்தைக்கு மேல் கூரை அமைக்கும் பணிக்கு, தோவாளை ஊராட்சி ஒன்றியத்தின் பொது நிதியிலிருந்து மூன்று லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கானப் பணிகளை அதிமுக வார்டு கவுன்சிலரான மேரி ஜோய் இன்று தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை பணிகள் தொடங்கிய நேரத்தில், அப்பகுதிக்கு வந்த ஊராட்சி மன்றத் தலைவரும் திமுக ஒன்றிய செயலாளருமான பிராங்க்ளின் பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து கேள்வி எழுப்பிய அதிமுக கவுன்சிலர் மற்றும் உறுப்பினர்களுடன், வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து திமுக ஒன்றியச் செயலாளர் கூறுகையில், “சந்தையில் மேற்கூரை அமைத்தால், மீன் விற்பனையின்போது அங்கு தண்ணீர் விரைவாக காயாமல், துர்நாற்றம் வீசக்கூடும். அதனால் தான் அந்த பணியினை தொடர வேண்டாம் என்றேன்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'உப்பு இல்லாமல் தான் சாப்பிடுகிறேன்' அண்ணாமலைக்கு கே.என்.நேரு பதில்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.