ETV Bharat / state

குமரியில் அதிக விலைக்கு காய்கறி விற்பனை: மக்கள் வேதனை - கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி: வடசேரி பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறிச் சந்தையில் நிர்ணயித்ததைவிட அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதாகவும், இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

காய்கறிச் சந்தையில் நிர்ணயித்ததை விட அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை

author img

By

Published : Apr 22, 2020, 12:51 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியில் அமைந்துள்ள கனக மூலம் சந்தையில் காய்கறிக் கடைகள் மிக நெருக்கமாக உள்ளன. இதனால், தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு கரோனா பரவும் இடர் நிலவியது.

இதனைக் கருத்தில்கொண்டு வடசேரி பேருந்து நிலையத்தில் மாநகராட்சி சார்பில் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டது. இதில் வியாபாரிகள் தனிநபர் இடைவெளி விட்டு காய்கறிக் கடைகள் அமைத்து பொதுமக்களிடம் காய்கறி வியாபாரம் செய்துவருகின்றனர்.

இந்நிலையில் கரோனா தடை உத்தரவைப் பயன்படுத்தி வியாபாரிகள் காய்கறிகளை அதிக விலைக்கு விற்பதாகப் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் நிர்ணயம்செய்த விலைக்குதான் காய்கறிகளை விற்பனைசெய்ய வேண்டும் என்று வியாபாரிகளுக்கு உத்தரவிட்டது.

காய்கறிச் சந்தையில் நிர்ணயித்ததை விட அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை

ஆனால், மாநகராட்சி நிர்வாகம் நிர்ணயித்ததைவிட அனைத்து காய்கறிகளும் கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.7 வரை அதிகமாக விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

இது குறித்து பொதுமக்கள் எத்தனையோ முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மாநகராட்சி நிர்வாகம் இதில் தலையிட்டு தினந்தோறும் காய்கறி விற்பனை சோதனை செய்ய வேண்டும் என்றும், ஒவ்வொரு கடை முன்னும் காய்கறிகளின் விலைப்பட்டியல் வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் பார்க்க: மத்திய குழுவுக்கு மேற்கு வங்க அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.