கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் செவ்வாய்க்கிழமை நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்புப் பணிக்காக 49 கோடி ரூபாய் நிதியை மூன்று ஆண்டுகளுக்கு முன் அரசு ஒதுக்கீடு செய்தது.
ஆனால் இதுநாள்வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட்டு சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்துவருகின்றனர். இதற்காக ஏற்கனவே போராட்டம் நடத்தியும் பலனில்லை.
எனவே, இது குறித்து மக்களவையில் குரல் கொடுக்கவுள்ளேன். மேலும், காந்தி சாலை முன்பு மத்திய அரசையும் அலுவலர்களையும் கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும். கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வெற்றிபெற்றதால் பாஜக அரசு இந்தத் தொகுதி மக்களைப் புறக்கணிக்கிறது.
மத்திய முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், வில்சன் கொலைக்கு எம்.பி. உள்பட எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள்தான் காரணம் எனப் படிக்காதவர்போல பேசிவருகிறார்" என்றார்.
இதையும் படிங்க: எதிர்க்கட்சியினர் விளம்பரத்திற்காக போராடுகிறார்கள்: அமைச்சர் குற்றச்சாட்டு