ETV Bharat / state

வசந்தகுமாரின் உடல் குமரியில் இன்று நல்லடக்கம்!

கரோனாவால் உயிரிழந்த மக்களவை உறுப்பினர் வசந்தகுமாரின் உடல் இன்று கன்னியாகுமரியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதால், அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

CONGRESS
CONGRESS
author img

By

Published : Aug 30, 2020, 12:58 AM IST

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 28ஆம் தேதி மாலை உயிரிழந்தார். அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் அவரது சொந்த ஊரான குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அவர்களது பாரம்பரிய இடத்தில் நடைபெற்றுவருகிறது, அவரது உடல் இன்று நள்ளிரவு சொந்த ஊர் வருகிறது.

vasanthakumar_mourning
நல்லடக்கப் பணிகள்

பின்னர் அவரது உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு, இன்று காலை 10 மணி அளவில் உறவினர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இது குறித்து அவரது சகோதரர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், "வசந்தகுமார் எனது பெரியப்பா பையன்தான் எனக்குத் தம்பி முறை. உழைப்பால் உயர்ந்தவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதற்கு முன்பாகவே பலருக்கு உதவி செய்தவர்.

குறிப்பாக ஊர் மக்களுக்கும் குழந்தைகளுக்கும் கேட்டதைச் செய்துகொடுப்பார். அவரது இழப்பு என்பது தாங்க முடியாதது, அவர் இறந்தது மிகவும் வேதனை அளிக்கிறது" எனக் கூறினார்.

வசந்தகுமாரின் சகோதரர் கோபாலகிருஷ்ணன்

இதையும் பாருங்க: 'வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட வசந்த குமார் உடல் - அஞ்சலி செலுத்த குவிந்த மக்கள்

மருத்துவர் ஏ.எம் அரசு கூறுகையில்:- "மறைந்த நாடாளுமன்ற வசந்தகுமார் பள்ளி மாணவ மாணவிகளுக்காக அதிக அளவிலான உதவிகளை செய்திருக்கிறார். குறிப்பாக அகஸ்தீஸ்வரம் பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளி மேம்பாட்டிற்காக தேவையான மேஜை, முதல் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். மேலும் மாணவிகள் பயன் அடைய வேண்டி ஸ்மார்ட் கிளாஸ் வசதியும் அவர் செய்துக் கொடுத்துள்ளார். மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அவர்களுக்கு உதவித் தொகைகளைப் வழங்கினார். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்." என்றார்.

மருத்துவர் ஏ.எம் அரசு

காங்கிரஸ் கட்சி சார்பில் வசந்தகுமாருக்கு அஞ்சலி:

திருச்சி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வசந்தகுமார் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அம்மாவட்ட காங்கிரஸ் சார்பில் மறைந்த வசந்தகுமார் திருஉருவ படத்திற்கு முன்னாள் மேயர் சுஜாதா, முன்னாள் மாவட்ட தலைவர் சரவணன், வர்தகபிரிவு சிந்தாமணி கணேசன், கோட்டதலைவர்கள் சிவாஜி சண்முகம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

vasanthakumar_mourning
காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி

ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அவரின் திருவுருவப் படத்திற்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவர் தேவேந்திரன், நகர் தலைவர் கோபி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் நகராட்சி அலுவலகம் எதிரே வசந்தகுமார் திருவுருவபடத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் அளவூர் நாகராஜன், பரந்தூர் சங்கர், பூக்கடை பத்மநாபன், துனண தலைவர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

இதையும் பாருங்க: 'பனங்காட்டில் பிறந்து உழைப்பால் உயர்ந்த வசந்தகுமார்' - பாரதிராஜா இரங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.