ETV Bharat / state

வாக்குவாதத்தில் ஈடுபட்ட வசந்தகுமார்!

கன்னியாகுமரி : குமரி மக்களவைத் தொகுதியின் வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்தபோது காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

vasanthkuma
author img

By

Published : Apr 18, 2019, 3:26 PM IST

தமிழகத்தில் 38 தொகுதிகாளுக்கான மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளின் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குமரி மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் இன்று காலை அகஸ்தீஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் தனது வாக்கினைத் பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து தொகுதி முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட வசந்தகுமார்

அப்போது குமாரபுரம் தோப்பூர் பகுதி பள்ளியில் ஆய்வு மேற்கொண்டபோது வசந்தகுமார் உடன் வந்த நான்கு பேரை போலீஸார் அனுமதிக்க மறுத்தனர். இதனையடுத்து ஒருவரை மட்டும் உடன் அழைத்து சென்று சென்றார். அப்போது போலீஸாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Intro:கன்னியாகுமரி: குமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், வாக்குப்பதிவு மையங்களை ஆய்வு செய்தபோது போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Body:குமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் இன்று காலை ஏழு முப்பது மணி அளவில் அகஸ்தீஸ்வரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
இதனை தொடர்ந்து அவர் மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில் இன்று மதியம் அவர் குமாரபுரம் தோப்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு மையத்திற்கு ஆய்வுக்காக வந்தார்.
அப்போது அவருடன் நான்கு பேர் வந்தனர். இதனை பார்த்த போலீசார் வசந்தகுமாரிடம் 4 பேர் செல்ல அனுமதி இல்லை என்று கூறினார். உடனடியாக வசந்தகுமார் 2 பேரை அங்கே நிறுத்திவிட்டு அவருடன் ஒருவரை மட்டும் அழைத்துக் கொண்டு வாக்குப்பதிவு மையம் அருகில் சென்றார்.
எனினும் போலீசார் தொடர்ந்து சத்தமாக ஏதோ பேசியபடி இருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த வசந்தகுமார் போலீசாரிடம் வந்து நீங்கள் கூறியதை ஏற்று நான் உடன் வந்தவர்களை நிறுத்தி விட்டு செல்கிறேன். எனினும் நீங்கள் தொடர்ந்து சப்தம் போட்டபடி இருக்கிறீர்கள். இது சரியில்லை என்று கூறினார்.
இதற்கும் போலீசாரும் ஏதோ பதில் சொல்ல, காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் வாக்குப் பதிவு மையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.