ETV Bharat / state

உணவக உரிமையாளர் கார் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சம் திருட்டு - kanyakumari

கன்னியாகுமரி: பிரபல உணவக உரிமையாளரின் காரை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் ரூ.3 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரின் கண்ணாடியை உடைத்து 3 லட்சம் ரூபாய் திருட்டு

author img

By

Published : Nov 3, 2020, 11:01 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட அலுவலக அருகாமையில், ட்ரிஸில் பிரஸ்டோ எனும் பிரபல உணவகம் உள்ளது. இந்த உணவகத்துக்கு இரவு நேரத்தில் பல வாடிக்கையாளர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் உணவகத்தின் உரிமையாளர் கார்த்திக் தனது விலை உயர்ந்த காரில் நேற்று (திங்கட்கிழமை) இரவு உணவகத்துக்கு வந்துள்ளார்.

பின்னர் உணவகத்தின் வாசலில் காரை நிறுத்தி விட்டு, தனது அறையில் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருந்தார். இதை கவனித்த அடையாளம் தெரியாத நபர்கள் 4 பேர் உணவகத்தின் காவலாளியின் கவனத்தை திசை திருப்பி, வேறொரு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த நேரத்தில், அவர்களில் இருவர் விலை உயர்ந்த காரின் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த ரூ.3 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் நால்வரும் தப்பிச் சென்றுள்ளனர். வாகனத்தை உடைத்ததும் காரில் இருந்து அலாரம் ஒலி சத்தமிட்டுள்ளது. இதைக் கேட்ட உணவகத்தின் உரிமையாளர் கார்த்தி, வெளியே ஓடி வந்து பார்ப்பதற்குள் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வடசேரி காவல்துறையினர் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து சில மீட்டர் தூரத்தில் உள்ள உணவகத்தில் நடைபெற்றுள்ள இந்த கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தச்சநல்லூர் அருகே சிலிண்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.