ETV Bharat / state

போலீஸ் உடையணிந்து கைவரிசை: 15 மணி நேரத்தில் 5 பேர் கைது - காவலர் உடையணிந்து கொள்ளை

தக்கலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் காவலர் உடையணிந்து கேரள நகை வியாபாரியின் காரை மறித்து 76 லட்சம் கொள்ளையடித்த ஐந்து நபர்களை 15 மணி நேரத்தில் கைது செய்து, அவர்களிடமிருந்து பணம், வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

unidentified persons robs 76 lakh from Kerala jeweler car on National Highway uses police dress

author img

By

Published : Jan 20, 2021, 3:28 PM IST

கன்னியாகுமரி: கேரள மாநிலம் நெய்யாற்றிகரை பகுதியைச் சேர்ந்தவர் சம்பத். இவர் பிரபல நகை கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள மற்ற நகை கடைகளுக்கும் மொத்தமாக நகை விற்பனை செய்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் நேற்று (ஜன. 19) காலை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் உள்ள சில கடைகளுக்கு நகையை விற்பனை செய்த பணம் ரூபாய் 76 லட்சத்து 40 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு நாகர்கோவிலுக்கு சொகுசு காரில் புறப்பட்டார். அவர் தக்கலை அருகே காரவிளை தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து கொண்டிருக்கும போது மற்றொரு சொகுசு காரில் காவலர் உடையணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் நான்கு பேர் சினிமா பட பாணியில் காரை வழிமறித்து சம்பத்திடமிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதை தொடர்ந்து நகைக்கடை உரிமையாளர் சம்பத் தக்கலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவலர் வேடமணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர்களையும் பிடிக்க நான்கு தனி படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

அந்த விசாரணையில், கொள்ளையர்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலின்படி, அங்கு விரைந்த தனிப்படையினர் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஓட்டுநர் கோபக்குமார், சுரேஷ்குமார், கண்ணன், ராஜேஷ்குமார், மனு என்ற சஜின்குமார் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.

போலீஸ் உடையணிந்து கைவரிசை: 5 பேர் கைது

பின்னர் அவர்களிடம் இருந்து 76.40 லட்சம் பணத்தை பறிமுதல் செய்ததோடு அவர்கள் பயன்படுத்திய கார், காவலர் உடை மற்றும் 10 செல்போன்களை பறிமுதல் செய்தனர். 15 மணி நேரத்தில் கொள்ளையர்களை கைது செய்த தனிப்படை காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.