கன்னியாகுமரியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் சில்லறை வணிகத்தை காக்க வலியுறுத்தி இருசக்கர வாகன சுதேசி எழுச்சி பேரணி நடைபெற்றது. இதைப் பேரவையின் மாவட்ட தலைவர் டேவிட்சன் தொடங்கிவைத்தார்.
இரு சக்கர வாகன பேரணியில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகள் பின்வருமாறு:
- நாகர்கோவில் மாநகராட்சியில் வணிகர்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. சாலையில் வெள்ளைக்கோட்டிற்கு வெளிப்புறம் வாகன நிறுத்த அனுமதித்தல், பழைய கட்டடங்களுக்கு மாநகராட்சியின் சட்டங்கள் சொல்லி அச்சுறுத்தல் போன்றவற்றை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
- வடசேரி சந்தையில் வணிகர்கள் கூடுதல் தொகைக்கு கடையை ஏலம் எடுத்து இன்று கடை வாடகை கொடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.
- பாரம்பரியமிக்க களியக்காவிளை சந்தை பகுதியை பாதுகாத்திட வேண்டும். அதில் வியாபாரம் செய்யும் ஒவ்வொரு வியாபாரியின் வாழ்விற்கு உத்தரவாதம் வழங்கும் வகையில் அடுக்குமாடி கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மேலும், ஆன்லைன் வர்த்தகத்தில் சில்லறை வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்தியர்களாகிய நாம் இந்திய பொருட்களை வாங்கி சில்லரை வணிகத்தை ஊக்கப்படுத்துவோம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.