சுரங்க பாதுகாப்பு இயக்குநர் ஜெனரல் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சுரங்கத் தொழில் வல்லுநர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர், தமிழ்நாடு கனிம பாதுகாப்பு குழும சேர்மன் கிருஷ்ணகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், பசுமை வழி சுரங்க தொழில்நுட்பங்களைப் பின்பற்றி நமது எதிர்கால சந்ததியினருக்குக் கனிம வளங்களையும் அதற்கு மூலதனமாக உள்ள சுரங்கங்களைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றார். மேலும் தாதுகளை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் பாதுகாப்பாக ஹெல்மேட், ஷூ போன்றவை வழங்குவதோடு தாதுகளைப் பிரிப்பதற்கு உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு கருவிகள் வழங்க வேண்டும் என்றார்.
தற்போது மத்திய மாநில அரசுகள் சுற்றுச்சூழல் கெடாத வகையில் பாதுகாப்பு விதிகளைச் செயல்படுத்துகிறது என்றும், அவ்வாறு பாதுகாப்பு அம்சங்கள் பின்பற்றாத நிறுவனங்களின் அனுமதிகள் ரத்து செய்யப்படும் என்றும் கூறினார். எனவே, பெரிய சுரங்கம் முதல் சிறிய சுரங்கங்கள் வரை முறையான சுரங்க விதிமுறைகளையும் நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார்.