கேரள மாநிலம் திருவனந்தபுரம், நெடியவிளைவீடு பகுதியைச் சேர்ந்தவர் சுகுமாரன் மகன் சாஜூ (40). திருவனந்தபுரம் பிரசாந்த் நகர் பனைவீடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ஆஷா (35). இவர்கள் இருவருக்கும் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் சாஜு, ஆஷா இருவருக்குமிடையே திருமணம் மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இவர்களின் உறவு குடும்பத்தினருக்கு தெரியவரவே இருவரையும் கண்டித்துள்ளனர்.
ஆனாலும், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி கன்னியாகுமரியில் உள்ள பிரபல தனியார் விடுதியில் இருவரும் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில், அவர்கள் தங்கியிருந்த அறை நேற்று (பிப்.17) திறக்காததால், சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் இது குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையிலான காவலர்கள், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது, இருவரும் துக்குபோட்டு உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். பின்னர் காவல் துறையினர் இருவரது உடலையும் மீட்டு உடற்கூராய்விற்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மைசூரில் பயங்கரம்... பிச்சை எடுத்துக்கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற கும்பல்!