தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் திருநெல்வேலி மண்டலத்திற்குட்பட்ட, கன்னியாகுமரி மாவட்டப் பணிமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, கடந்த செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை வழங்கப்பட்டதால், வரும் தீபாவளிப் பண்டிகை அன்று விடுமுறை எடுக்கக்கூடாது எனவும், பணிக்கு ஊழியர்கள் வரவேண்டும் எனவும் போக்குவரத்துக் கழக அலுவலர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே அலுவலர்கள் மட்டும் தீபாவளிப் பண்டிகைக்கு விடுமுறை எடுத்துக் கொண்டாடி, ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காமல் பணிச்சுமை அளிக்கும் விதத்தில் செயல்படும் போக்கினை கண்டிக்கும்விதமாக, குமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ளப் போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான போக்குவரத்து கழக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 6 வயது சிறுமியை மாடியிலிருந்து தூக்கி வீசி கொடூரக் கொலை செய்த சித்தி!