கன்னியாகுமரி: சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த தமிழரும் போக்குவரத்துத் துறை அமைச்சருமான ஈஸ்வரன் கன்னியாகுமரிக்கு
வருகை தந்தார். அவர் குமரி அருகே அமைந்துள்ள சொத்தவிளை கடற்கரைக்குச் சென்று இயற்கை அழகை கண்டு ரசித்தார். பின்னர் கன்னியாகுமரியில் உள்ள பழமை வாய்ந்த குமரி பகவதி அம்மன் கோயிலுக்கு வருகை தந்தார்.
அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது குமரிக்கு வர வேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்து இருந்தது நிறைவேறியதாகவும், இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் கூறினார்.
மேலும் இந்தியா, சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளிடையே மிக நெருக்கமான உறவு இருந்து வருவதாகவும்; மேலும் நெருக்கமாக வாய்ப்புகள் இருப்பதாகவும், இந்தியா - சிங்கப்பூர் மக்களிடையே அன்பும் பாசமும் நிறைந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Winter session 2022: விஜய் வசந்த் எம்.பி. வைத்துள்ள முக்கிய கோரிக்கை!