வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிபாறை பெருஞ்சாணி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் அணைகளில் இருந்து வினாடிக்கு சுமார் 3000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து திற்பரப்பு அருவியில் காற்றாற்று வெள்ளம் ஓடியது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் வெள்ளம் குறைந்ததன் காரணமாக இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கேரளாவில் இருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிந்தனர்.
வரும் 17ஆம் தேதி முதல் ஐயப்ப பக்தர்களின் சீசன் தொடங்க இருப்பதால் திற்பரப்பு நீர்வீழ்ச்சிக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மழை ...தற்காலிக அருவியில் குளியல் போட்ட சிறுவர்கள்..