சுற்றுலாத் துறை, தமிழ்நாடு தொழில் முனைவோர், புத்தாக்க நிறுவனம் ஆகியன சார்பில் சுற்றுலா சார்ந்த வாழ்வாதார செயல்பாடுகளில் குமரி மக்களின் பங்கேற்பை வலுப்படுத்தும் நோக்கில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் கருத்துப் பட்டறை நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இதன் போது பேசிய மாவட்ட ஆட்சியர்,"கன்னியாகுமரி கடற்கரை, முட்டம், மணக்குடி, உதயகிரி கோட்டை, திற்பரப்பு ஆகிய ஐந்து சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. சுற்றுலா சார்ந்த நிறுவனங்கள், உள்ளூர் மக்களை சுற்றுலாச் சார்ந்த திட்டங்கள் மற்றும் அதன் செயல்பாடுகளின் துறை சார்ந்த அலுவலர்களின் பங்கேற்பு உறுதி செய்யப்பட்டது. வளர்ச்சிப் பணிகளைக் கொண்டு உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்கான ஆலோசனைகளை பெறுவது என்ற முக்கிய குறிக்கோளுடன் இந்த பயிற்சிப் பட்டறை தொடங்கியுள்ளது" எனக் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, பத்மநாபபுரம் துணை ஆட்சியர் சரண்யா அரி, திட்ட இயக்குநர் (மகளிர்) பிச்சை, மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : 'கொரோனாவைத் தடுக்க கைகளை சோப்பிட்டு கழுவச் சொல்லுங்க' - ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுரை