கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கடந்த சில மாதங்களாக அனுமதியின்றி பாறாங்கற்கள், மணல் போன்ற கட்டுமானப் பொருள்கள் கேரளா மற்றும் பல்வேறு பகுதிகளுக்கும் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், நேற்று (ஆக.13) ஆரல்வாய்மொழி அருகே முப்பந்தல் பகுதியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் பாரங்கற்களை ஏற்றி வந்த ஆறு டாரஸ் லாரிகளை தோவாளை வட்டாட்சியர் மற்றும் வருவாய் அலுவலர்கள் பிடித்தனர்.
பின்னர் பிடிபட்ட லாரிகளை பண்டாரபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அலுவலர்கள் ஒப்படைத்தனர். ஆனால், லாரிகள் பிடிபட்டு பல மணி நேரமாகியும் லாரிகளுக்கு அபராதம் விதிப்பதில் காலம் தாழ்த்தியதோடு, எந்தவிதமான மேல் நடவடிக்கையும் எடுக்காமல் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.