ETV Bharat / state

கோயில் திருவிழாவை குறிவைத்து திருடும் டிப்டாப் பெண்கள் கைது!

author img

By

Published : Jan 28, 2023, 5:58 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே கோயில் கும்பாபிஷேக விழாவில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மூன்று பெண்களை காவல் துறையினர் கைது செய்து செய்தனர்.

Etv Bharat கூட்ட நெரிசலை பயன்படுத்தி செயின் பறிப்பு

கூட்ட நெரிசலை பயன்படுத்தி செயின் பறிப்பு

கன்னியாகுமரி: குமரியில் தற்போது பல்வேறு கோயில்களில் கும்பாபிஷேகம், தேவாலயங்களில் திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் அணிந்து வரும் நகைகள் காணாமல் போனதாக பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் வந்துள்ளன.

இதனை கருத்தில் கொண்டு மாவட்ட காவல் துறை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவந்தனர். விழாக்களின்போது பக்தர்களின் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஒரு கும்பல் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களைப் பிடிக்கக் காவல் துறையினர் கண்காணிப்பு பணியினை மேலும் தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் நேற்று இரணியல் அருகே உள்ள புகழ் பெற்ற சிவன் கோயில் ஒன்றில் கும்பாபிஷேக நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில், பங்கேற்ற பக்தர் விஜயலட்சுமி என்பவரின் 2 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துத் தப்பியோடிய நிலையில் அவர் அங்கிருந்த இரணியல் காவல் துறையினரிடம் தகவலளித்தார்.

உடனடியாக காவல் துறையினர் அந்த கூட்ட நெரிசலில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த 3 பெண்களைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண்கள் தூத்துக்குடி மாவட்டம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சிதா, லலிதா மற்றும் மாரி என்பது தெரியவந்தது.

இவர்கள், திருவிழா கூட்ட நெரிசலில் புகுந்து பெண்களைக் குறிவைத்துத் தங்கச் சங்கிலியைப் பறித்துச் செல்வது தெரியவந்தது. மேலும், புகார் கொடுத்த விஜயலட்சுமியின் 2 சவரன் தங்க சங்கிலியை பறித்ததும் தெரியவந்தது. இதனையடுத்து தங்க சங்கிலியை மீட்ட காவல் துறையினர் ரஞ்சிதா, லலிதா, மாரி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ரத சப்தமியை முன்னிட்டு சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய சீனிவாச பெருமாள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.