கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு, ஆரல்வாய்மொழி காவல் நிலைய பகுதிகளில் அடிதடி, கொள்ளை, கொலை மிரட்டல் போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த பீட்டர் கனிஷ்கர் (23), சுகுமாரன் என்ற சுள்ளான் (26), நடராஜன் (20) ஆகிய மூன்று பேரும் காவல்துறையினர் எச்சரிக்கையை மீறித் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரைத்தார். அதன்பேரில், மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் வடநரே உத்தரவிட்டார்.
அதன்படி மூன்று பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு இன்று (அக்-29) குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.