கன்னியாகுமரி: கேரள மாநிலத்திலிருந்து மண்ணுளிப்பாம்பு கடத்தப்படுவதாக ஆரல்வாய்மொழி வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆரல்வாய்மொழி வனச்சரகர் திலிபன் தலைமயில் வன அலுவலர்கள் நாகர்கோவிலில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒழுகினசேரி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், 2 கிலோ 600 கிராம் எடை கொண்ட மண்ணுளி பாம்பு சாக்கு பைக்குள் அடைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
பாம்பை கடத்திய மூவர் கைது:
இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் சதீஷ், சதீஷ் சந்திரன் நாயர், குமரி மாவட்டம் தரப்பு பகுதியைச் சேர்ந்த ஜோஸ் வில்பர்ட் ஆகியோரை கைது செய்த வன அலுவலர்கள், மண்ணுளிப் பாம்பு, சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கார் கதவில் கர்நாடக மதுபான பாக்கெட்டுகள் கடத்தல்: நான்கு பேர் கைது