கன்னியாகுமரி: இ 'அக்னிபத்' திட்டத்தில் ஆள்சேர்க்கும் முகாம் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று (ஆக.21) முதல் செப்.1 வரை நடக்கிறது. முன்னதாக, நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய இதற்கானப் பணிகள் அதிகாலை 5 மணிக்கு நிறைவடைந்தன.
இதில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை நாகை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகத்தின் 17 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தேர்வு முகாமில் அனுமதிக்கப்படுகின்றனர்.
இம்முகாமில், தினசரி 3,000 பேர் வீதம் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்கா நள்ளிரவு முதலே ஏராளமான இளைஞர்கள் திரண்டிருந்தனர். நாகர்கோவில் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் அவர்கள் வரிசையாக அமர வைக்கப்பட்டு, பின்னர் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்திற்கு தேர்வுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனால், நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் இருந்து மணிமேடை வரை செல்லும் சாலைகள் அனைத்தும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்த தேர்வுக்காக திருவனந்தபுரம், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இராணுவ பட்டாலியனில் இருந்து 150-க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்கள் வருகை தந்து தேர்வுகளை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'அக்னிபாத்' வீரர்களுக்கு இஸ்ரோவிலும் வேலை - இஸ்ரோ தலைவர் சோமநாத்