ETV Bharat / state

தொடர் விடுமுறையை முன்னிட்டு குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்! - தொடர் விடுமுறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி: ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி தொடர் விடுமுறையையொட்டி ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர்.

k
k
author img

By

Published : Oct 25, 2020, 10:28 PM IST

சுற்றுலாத் தலங்களில் மிக முக்கியமான இடமாக கன்னியாகுமரி திகழ்ந்து வருகின்றது. அதிகாலையில் சூரிய உதயத்தையும் மாலையில் சூரியன் மறைவதையும் ஒரே இடத்தில் காண்பது கன்னியாகுமரியின் சிறப்பம்சமாகும். எனவே, இந்த அழகிய காட்சிகளைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் வருவதைக் காண முடியும்.

கடந்த சில மாதங்களாக கரோனா தொற்றால் களையிழந்து இருந்த கன்னியாகுமரி, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி தொடர் விடுமுறையில் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. இன்று(அக்.25) ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரி கடற்கரையின் அழகை கண்டு ரசித்தனர்.

ஆனால், விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்குச் செல்லும் படகு போக்குவரத்து மட்டும் ரத்து செய்யப்பட்டன. சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் வருமானமின்றி தவித்த வியாபாரிகளுக்கு மக்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.