ETV Bharat / state

தூத்துக்குடியில் 1007 உள்ளாட்சிப் பதவிகளுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு - ஆட்சியர் சந்தீப் நந்தூரி

author img

By

Published : Dec 20, 2019, 4:26 PM IST

தூத்துக்குடி: மாவட்டம் முழுவதும் இதுவரை 1007 உள்ளாட்சிப் பதவிகளுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

collector santheep nanduri
collector santheep nanduri

தூத்துக்குடியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் வேகமாக நடைபெற்றுவருகின்றன. இரண்டு கட்டமாக நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதில், "மூன்றாயிரத்து 537 இடங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்தப் பதவியிடங்களுக்கு மொத்தம் ஒன்பதாயிரத்து 807 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு பரிசீலனையில் 135 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

903 பேர் வேட்புமனுவை திரும்பப் பெற்றுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 1007 பணியிடங்களுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 28 பேரும், பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்கு 978 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல் முதற்கட்டமாக ஏழு ஒன்றியங்களுக்கு நடத்தப்படுகின்றது.

இந்த ஏழு ஒன்றியங்களுக்கான வாக்குச்சீட்டு, வாக்காளர் பட்டியல் அச்சடிக்கும் பணி 22ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு அந்தந்த பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும். இரண்டாம் கட்டமாக 30ஆம் தேதி நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சடிக்கும் பணி 24ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு அந்தந்தப் பகுதிகளுக்கு பிரித்து அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டம் முழுவதிலும் மொத்தம் 374 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடியில் 33 விழுக்காடு என்ற அடிப்படையில் வீடியோ கேமரா மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படும். இடைத்தேர்தலுக்குப் பின்பற்றப்பட்ட வாக்காளர் பட்டியல் உள்ளாட்சித் தேர்தலில் பின்பற்றப்படும். கூடுதலான வாக்காளர்கள் சேர்ப்பதற்கான அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும்" என்றார்.

தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி

இதையும் படிங்க: 'குழந்தைப் பாக்கியம் வேணுமா... நாங்க இருக்கோம்' - நூதன மோசடியில் போலி மருத்துவர்!

Intro:தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 1007 உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு - ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்
Body:தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 1007 உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு - ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி

தூத்துக்குடியில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இரண்டு கட்டமாக நடைபெறும் உள்ளாட்சித்தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது கூறுகையில், உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கு இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர் உள்பட நான்கு பதவிகளுக்கு நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 3 ஆயிரத்து 537 இடங்களுக்கு உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படுகின்றது.
இந்த பணியிடங்களுக்கு மொத்தம் 9 ஆயிரத்து 807 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு பரிசீலனை பரிசீலனையில் 135 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 903 பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 1007 பணியிடங்களுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 28 பேரும், பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்கு 978 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு சீட்டு அச்சடிக்கும் பணி திருநெல்வேலி, தூத்துக்குடி திருச்செந்தூர் ஸ்ரீவைகுண்டம் உள்பட மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் உள்ள அச்சகங்களில் அச்சடிக்கும் பணி தொடங்கவுள்ளது. முதற்கட்டமாக 7 ஒன்றியங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகின்றது. இந்த ஏழு ஒன்றியங்களுக்கான வாக்குச்சீட்டு மற்றும் வாக்காளர் பட்டியல் அச்சடிக்கும் பணி 22ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு அந்தந்த பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும். இரண்டாம் கட்டமாக 30ஆம் தேதி நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சடிக்கும் பணி 24-ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு அந்தந்தப் பகுதிகளுக்கு பிரித்து அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் இடங்கள் 128 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் 15 முதல் 20 பூத்துகள் அடங்கியிருக்கும். இந்த பூத்களில் போலீஸ் அதிகாரி, வருவாய் ஆய்வாளர், பறக்கும்படை உறுப்பினர் ஆகியோர் கொண்ட குழுவினர் கண்காணிப்பு பணி செய்வர். 2 ஒன்றியங்களுக்கு ஒரு பறக்கும் படை குழு என்ற வீதம் அமைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் 8 மணி நேர பணி அடிப்படையில் மூன்று சுழற்சியாக 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுவர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் தொடர்பான புகார்களை இவர்கள் உடனடியாக கண்காணிப்பு செய்வர். மாவட்டம் முழுவதிலும் மொத்தம் 374 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச் சாவடியில் 33% என்ற அடிப்படையில் வீடியோ கேமரா மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படும், மேலும் மத்திய அரசின் நுண் கண்காணிப்பாளர்கள் இந்த வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வர். இடைத்தேர்தலுக்கு பின்பற்றப்பட்ட வாக்காளர் பட்டியல் உள்ளாட்சித் தேர்தலில் பின்பற்றப்படும். கூடுதலான வாக்காளர்கள் சேர்ப்பதற்கான அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும் என்றார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.